விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அ.தி.மு.க. கட்சியினருக்கானது தான் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி
விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அ.தி.மு.க. கட்சியினருக்கானது தான்-தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி
விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அ.தி.மு.க. கட்சியினருக்கானது தான்
தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி
மலைக்கோட்டை, பிப். 28-
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு பின், கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
தி.மு.க. மாநாடு தேர்தல் அறிவித்தால் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் தி.மு.க. தலைவருடன் பேசி மாநாடு போல் இல்லாமல் கூட்டம் நடைபெறுவதற்கு திட்டமிடப்படும். ஐ.ஜே.கே, தி.மு.க. கூட்டணியில் இருந்து சென்றது அவர்களுக்குத் தான் நஷ்டம். 2 மிகப்பெரிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளன. அதனால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அ.தி.மு.க. கட்சிகாரர்களுக்கான கடன் தள்ளுபடி தான். ஒரு விவசாயி கூட இதில் பலன் அடையவில்லை. மக்கள் நீதி மையத்தின் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது பற்றி எனக்கு தெரியாது. திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கட்சி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story