தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: எம்.எல்.ஏ. அலுவலகங்கள் மூடல்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், எம்.எல்.ஏ. அலுவலகங்கள் மூடப்பட்டன.
ஈரோடு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், எம்.எல்.ஏ. அலுவலகங்கள் மூடப்பட்டன.
பவானிசாகர் தொகுதி
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிமுைறகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. அலுவலகங்கள் மூடப்பட்டு் வருகின்றன. சுவர்களில் வரையப்பட்ட அரசியல் கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் அழிக்கப்பட்டு்ம், பதாகைகள், கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டும் வருகின்றன.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்களும் மூடப்பட்டு வருகின்றன. சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி ெதாடக்கப்பள்ளி அருகே உள்ள பவானிசாகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அண்ணாதுரை ஆகியோர் பூட்டுப்போட்டு பூட்டினர்.
கோபி
இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி கோவை மெயின்ரோட்டில் உள்ள பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நேற்று புஞ்சைபுளியம்பட்டி நில வருவாய் அலுவலர் நரசிம்மன் பூட்டினார். பின்னர் அலுவலகத்துக்கான சாவி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒன்றிய குழு கூட்ட அரங்க அலுவலகமும் சீல் வைத்து பூட்டப்பட்டது. கோபி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கரட்டடிபாளையத்தில் உள்ள லக்கம்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலகமும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story