புஞ்சைபுளியம்பட்டி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து நாசம்- 2 ஆடுகள் கருகி சாவு
புஞ்சைபுளியம்பட்டி அருகே நடந்த தீ விபத்தில் வீடு எரிந்து நாசம் ஆனதுடன், 2 ஆடுகள் கருகி இறந்தன.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி வலையன் தோட்டத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 55). ஓலை குடிசை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் முன்புறம் தகரத்தாலான கூரை வேயப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு வீடு திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் வீட்டின் முன்பு கட்டப்பட்ட 2 ஆடுகள் கருகி செத்தன. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story