பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் தீர்த்தவாரி
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாவூர்சத்திரம், பிப்.28-
பாவூர்சத்திரம் காமராஜர்நகர் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழாவின் 11-வது நாள் விழா பிராமணர் சமுதாயம் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி காலையில் கோவிலில் இருந்து சப்பரத்தில் முருக பெருமான் எழுந்தருளி கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு சென்றடைந்தார். பின்னர் அங்குள்ள தெப்பக்குளம் விநாயகர் கோவில் அருகில் முருகனுக்கு அபிஷேகம், தீர்த்தவாரி, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் முருக பெருமான் அங்கிருந்து புறப்பட்டு வென்னிமலை வந்தடைந்தார். பின்னர் பூஞ்சப்பர காட்சி, புஷ்பாஞ்சலி ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story