சங்கரன்கோவில் அருகே கூட்டுறவு சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை
சங்கரன்கோவில் அருகே கூட்டுறவு சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.1 லட்சத்துக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும் கூட்டுறவு சங்கத்தினர் கமிஷன் கேட்கின்றனர். 6 பவுன் வரையிலும் நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதால், கூட்டுறவு சங்கத்தினர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் நகைக்கடன் வழங்குகின்றனர்’ என்று தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சின்ன கோவிலான்குளம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story