கடையநல்லூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு


கடையநல்லூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு
x
தினத்தந்தி 28 Feb 2021 5:51 AM IST (Updated: 28 Feb 2021 5:51 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் வடக்கு காலனி தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவருடைய மகன் விக்னேஷ் (வயது 16). இவர் கடையநல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று சொக்கம்பட்டி அருகே போகநல்லூர் வயல்வெளியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது கிணற்றின் மேலே இருந்து கிணற்றுக்குள் தலைகீழாக சர்க் அடித்து பாய்ந்து விழுந்து குளித்தபோது நீரில் மூழ்கினார்.

உடனே அருகில் உள்ளவர்கள் சொக்கம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீருக்குள் மூழ்கிய விக்னேசை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story