சங்கரன்கோவிலில் தி.மு.க.வினர் இருசக்கர வாகன பேரணி


சங்கரன்கோவிலில் தி.மு.க.வினர் இருசக்கர வாகன பேரணி
x
தினத்தந்தி 28 Feb 2021 6:04 AM IST (Updated: 28 Feb 2021 6:04 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் தி.மு.க.வினர் இருசக்கர வாகன பிரசார பேரணி நடத்தினர்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகர தி.மு.க. சார்பில் ‘ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப்போறாரு’ என்ற தலைப்பில் இருசக்கர வாகன பிரசார பேரணி நடந்தது. தனுஷ்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சங்கர், இளைஞரணி சரவணன், பிரகாஷ், மாவட்ட விவசாய அணி ஸ்ரீகுமார், மாவட்ட வர்த்தக அணி பத்மநாபன், முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கலந்துகொண்டு, பேரணியை தொடங்கி வைத்தார். சங்கரன்கோவில் நீதிமன்றம் அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நீதிமன்றம் அருகே முடிவடைந்தது. இதில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, வெற்றிவிஜயன், கிறிஸ்டோபர், நகர செயலாளர் பவுல் என்ற பால்ராஜ், மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் வக்கீல்கள் ராஜா, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story