சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி 5, 6, 7-ந் தேதிகளில் நடக்கிறது


சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி 5, 6, 7-ந் தேதிகளில் நடக்கிறது
x
தினத்தந்தி 28 Feb 2021 8:40 AM IST (Updated: 28 Feb 2021 8:40 AM IST)
t-max-icont-min-icon

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 44-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை, 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 44-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 5, 6 மற்றும் 7-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது.

5-ந்தேதி 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் குடும்பம், புத்தக உலகம் என்ற தலைப்பிலும், 6-ந்தேதி 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகமும் நானும், இயற்கையும் வாழ்வும் என்ற தலைப்பிலும், 7-ந்தேதி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கையிலிருக்கும் பூமி, உடலினை உறுதி செய் என்ற தலைப்பிலும் ஓவிய போட்டி நடக்கிறது.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1,000, ஆறுதல் பரிசாக ரூ.500 வழங்கப்படுகிறது. இதற்காக புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தில் மாணவர்கள் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Next Story