திருமண ஆசைவார்த்தை கூறி கேரள சிறுமி கடத்தல் பானிபூரி வியாபாரி கைது
திருமண ஆசைவார்த்தை கூறி கேரள சிறுமி கடத்தல் பானிபூரி வியாபாரி கைது.
சென்னை,
கேரள மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க தனது தாயுடன் கடந்த 21-ந்தேதி சென்னை வந்தார். அந்த சிறுமி கடந்த 22-ந்தேதி தனது தாயுடன் மெரினா கடற்கரைக்கு செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்துக்கு வந்துள்ளார்.
தாயாரிடம் கடைக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி மாயமானார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் எழும்பூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமி மாயம் என்று எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்தநிலையில் அந்த சிறுமியை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே பானிபூரி வியாபாரம் செய்து வரும் திரிசூலம் ஏரிக்கரை சத்தியா நகரை சேர்ந்த ஜான்சன் (வயது 23) என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி, கடத்திச் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு எழும்பூர் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. ஜான்சன் கைது செய்யப்பட்டார். சிறுமி மீட்கப்பட்டார். ஜான்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story