உடன்குடி கூழையன்குண்டு ஆகாசமாடன் சுவாமி கோவில் கொடை விழா 4-ஆம் தேதி தொடங்குகிறது.


உடன்குடி கூழையன்குண்டு  ஆகாசமாடன் சுவாமி கோவில்  கொடை விழா  4-ஆம் தேதி தொடங்குகிறது.
x
தினத்தந்தி 28 Feb 2021 11:37 AM GMT (Updated: 28 Feb 2021 11:37 AM GMT)

உடன்குடி கூழையன்குண்டு ஆகாசமாடன் சுவாமி கோவில் கொடை விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா வருகி்ற 4-ஆம் தேதி தொடங்குகிறது.

உடன்குடி:
உடன்குடி கூழையன்குண்டு ஆகாசமாடன் சுவாமி கோவில்  கொடை விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா வருகி்ற 4-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலையில் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் உள்ள கடலில் இருந்து கடல் தீர்த்தம் எடுத்து வரப்படும். காலை 11 மணிக்கு சுவாமிகளுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், மாலை 6 மணிக்கு நாட்டில் வறுமை நீங்கி நாடுசெழிக்க வேண்டி பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு வில்லிசை, நடுஇரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும்,  5-ம் தேதி காலை 8 மணிக்கு சுவாமிக்கு நேமிஷங்கள் படைத்தல், நண்பகல் 11 மணிக்கு வில்லிசை, ஒரு மணிக்கு சிறப்பு அலங்கர பூஜையுடன் சுவாமி வீதியுலா வருதல,் இரவு 7 மணிக்கு சுவாமிக்கு முளைப்பாரி எடுத்தல், இரவு 8 மணிக்கு வில்லிசை நடு இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும்.
6-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு படைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், நண்பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கும் மதிய உணவு அன்னதானம் வழங்கப்படும். 

Next Story