தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 Feb 2021 12:02 PM GMT (Updated: 28 Feb 2021 12:02 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், அதிகாரிகள் மேற்பார்வையில் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், அதிகாரிகள் மேற்பார்வையில் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சுவர் விளம்பரங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் முழுமையாக அகற்றுவதற்கான உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, பஞ்சாயத்து அதிகாரிகள் மேற்பார்வையில், சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி நடந்தது.
அழிப்பு
தூத்துக்குடி மாநகராட்சியில் எழுதப்பட்டு இருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. 
அதே போன்று அரசியல் கட்சி சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. சில அரசியல் கட்சியினர் தங்கள் சுவர் விளம்பரங்களை வெள்ளை போர்டுகளை கொண்டு மறைத்து உள்ளனர். 
மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன

Next Story