வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 28 Feb 2021 3:47 PM GMT (Updated: 28 Feb 2021 3:47 PM GMT)

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


ஆண்டிப்பட்டி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் முழுக்கொள்ளளவான 71 அடியை எட்டியது. 

இதையடுத்து, அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

 இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அந்த மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். 


இதைக்கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டத்திற்கு வைகை ஆற்றின் வழியாக நேற்று முதல் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

இந்த தண்ணீர் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை வரை  திறக்கப்பட உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.22 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வைகை அணையில் இருப்பு உள்ள தண்ணீரை இனி குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.


Next Story