பெருமாநல்லூர் அருகே முயல்வேட்டைக்கு சென்ற போது வாலிபர் தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
முயல்வேட்டைக்கு சென்ற போது வாலிபர் தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
பெருமாநல்லூர்:-
பெருமாநல்லூர் அருகே முயல்வேட்டைக்கு சென்ற போது வாலிபர் தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
துப்பாக்கி குண்டு பாய்ந்தது
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டி வீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 29). இவர்களுடைய நண்பர்கள் நியூ திருப்பூர் அருகிலுள்ள வேலூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (20), மற்றும் பழங்கரையை சேர்ந்த சந்துரு (30). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் நியூதிருப்பூருக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் முயல்வேட்டைக்கு சென்றனர். இதில் சந்துரு துப்பாக்கி ஒன்றையும் கொண்டு சென்றார். இந்த துப்பாக்கி ஏர் கன் வகையை சார்ந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முயல் வேட்டையில் ஈடுபட துப்பாக்கியை தயார் செய்யும்போது, திடீரென்று சந்துரு வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறி முருகேசனின் தோள்பட்டை மீது பாய்ந்தது.
இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த முருகேசனின் உறவினர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இது குறித்த புகாரின் பேரில், பெருமாநல்லூர் போலீசார் முருகேசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் மகேந்திரனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய சந்துருவை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story