மாவட்ட செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி + "||" + accident

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி
பூவந்தி அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
திருப்புவனம்,
மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 25). இவர் தனது நண்பரான செல்லூரை சேர்ந்த சூர்யபிரகாசுடன் சிவகங்கையில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் சென்றார். பூவந்தியை அடுத்த அரசனூர் சமத்துவப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பிரவீன்குமார் தலையில் ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சூர்யபிரகாஷ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து பிரவீன்குமாரின் தந்தை பால்ராஜ் பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் எது? என விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. லாரி மோதி என்ஜினீயர் பலி
பெரம்பலூர் அருகே லாரி மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. மாட்டுவண்டி மீது லாரி மோதியதில் மாடு செத்தது
மாட்டுவண்டி மீது லாரி மோதிய விபத்தில் மாடு செத்தது
4. ஆஸ்திரேலியாவில் போதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் (வயது 48).‌ இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
5. கட்டிட மேஸ்திரி பலி
திருப்பத்தூர் அருகே சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதலில் கட்டிட மேஸ்திரி பலியானார்.