மாவட்ட செய்திகள்

நாய்கள் கடித்து குதறியதில் 28 ஆடுகள் செத்தன + "||" + 28 goats die after being bitten by dogs

நாய்கள் கடித்து குதறியதில் 28 ஆடுகள் செத்தன

நாய்கள் கடித்து குதறியதில் 28 ஆடுகள் செத்தன
விக்கிரவாண்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் 28 ஆடுகள் செத்தன.
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி குமுதா(வயது 38). இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது நிலத்தில் உள்ள பட்டியில் செம்மறி ஆடுகளை அடைத்து விட்டு குமுதா வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் பட்டிக்கு வந்து பார்த்தபோது் 3 நாய்கள், செம்மறி ஆடுகளை கடித்து குதறிக்கொண்டிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமுதா, அந்த நாய்களை விரட்டியடித்தார். இருப்பினும் நாய்கள் கடித்து குதறியதில் 28 செம்மறி ஆடுகள் செத்து கிடந்தன. 3 செம்மறி ஆடுகள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதை பார்த்து அவர் கதறி அழுதார். இது பற்றி தகவல் அறிந்ததும் எண்ணாயிரம் கால்நடை மருத்துவர் பொற்செழியன் விரைந்து வந்து, காயமடைந்த செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.