மாவட்ட செய்திகள்

காருக்கு தீ வைப்பு + "||" + Car fire

காருக்கு தீ வைப்பு

காருக்கு தீ வைப்பு
மேல்மலையனூா் அருகே காருக்கு தீ வைக்கப்பட்டது.
மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே உள்ள ரோடுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் விஜயகுமார்(வயது 37). இவர் தனக்கு சொந்தமான காரை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், காருக்கு தீ வைத்தனர். இதில் மளமளவென கார் முற்றிலுமாக எரிந்து, எலும்புக்கூடு போல் ஆனது. இது குறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.