அரகண்டநல்லூரில் அனைத்துக் கட்சியினர் உண்ணாவிரதம்


அரகண்டநல்லூரில் அனைத்துக் கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 28 Feb 2021 10:55 PM IST (Updated: 28 Feb 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைக்கக்கோரி அரகண்டநல்லூரில், அனைத்துக் கட்சியினர் உண்ணாவிரதம்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைப்பதற்கு பொதுமக்கள் ரூ.1 லட்சம் பணம் வசூல் செய்து அதை அரசு கருவூலத்தில் செலுத்தினர். ஆனால் பள்ளி அமைப்பதற்கு இதுநாள் வரை அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.  இந்த நிலையில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைக்கக் கோரி அரகண்டநல்லூர் கடைவீதியில் நேற்று ஊர் பொதுமக்கள், கல்வி மேம்பாட்டுக் குழு மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. இதில் அனைத்து கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். போராட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story