மாவட்ட செய்திகள்

காட்பாடி ரெயில்நிலையத்தில் கிடந்த ஒரு கிலோ போதைபொருள் + "||" + A kilo of drugs lying at the train station

காட்பாடி ரெயில்நிலையத்தில் கிடந்த ஒரு கிலோ போதைபொருள்

காட்பாடி ரெயில்நிலையத்தில் கிடந்த ஒரு கிலோ போதைபொருள்
காட்பாடி ரெயில்நிலையத்தில் கிடந்த ஒரு கிலோ போதைபொருள்
காட்பாடி

தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்க பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. எனவே பரிசுப்பொருகள், பணம் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் திப்ரத் சர்ப்பதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ஜீவானந்தம், விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்களான ஜூலி மற்றும் ஜாக் ஆகியவற்றின் உதவியுடனும் நடைமேடை, பயணிகள் காத்திருக்கும் அறை, பார்சல் நிலையம், முன்பதிவு மையம் ஆகிய பகுதிகளில் பயணிகளின் உடமைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் கேட்பாரற்று கிடந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் சுமார் ஒரு கிலோ மதிப்புள்ள அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் தம்பாக் போதை பொருட்கள் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். மேலும் இந்த சோதனையானது தினமும் தொடர்ந்து நடைபெறும் என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.