25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு வழங்க வேண்டும்


25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த  மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை  அரசு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Feb 2021 11:29 PM IST (Updated: 28 Feb 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

25 இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு வழங்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடந்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை:
கருத்தரங்கு
மெட்ரிக் ஓசை மாத இதழ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கு புதுக்கோட்டையில் கே.எம்.மகாலில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் அசரப் அன்சாரி தலைமை தாங்கினார். சட்டப்பாதுகாப்பு இயக்குனர் யோகராஜ், செயல் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சென்னை சட்டப்பாதுகாப்பு சங்க தலைவர் மனோகர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்வு இல்லாமல் தேர்ச்சியா? மாணவர்களின் எதிர்கால நலன் என்ன? என்ற தலைப்பில் இன்றைய கல்வி சூழல் குறித்து பேசினார்.
தீர்மானங்கள்
கருத்தரங்கில் இந்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு வழங்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை அவசியம் நடத்த வேண்டும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் உடனே திறக்க வேண்டும். தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்கனவே கேட்டுக்கொண்ட தீர்மானத்தின் படி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கருத்தரங்கில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செயலாளர் முத்துக்கருப்பன் வரவேற்று பேசினார். முடிவில் பொருளாளர் மேசியா சந்தோஷம் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் ரமணன் தொகுத்து வழங்கினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி, ராஜூ தமிழ்மாறன், அற்புத அலெக்சாண்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story