அரவக்குறிச்சி பகுதிகளில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்
சூரியகாந்தி விளைச்சல் அமோகம் நடந்தது.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அரவக்குறிச்சி கணக்குப்பிள்ளை புதூர் சின்னா கவுண்டனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். தற்போது சூரியகாந்தி நன்கு வளர்ச்சி அடைந்து சூரியகாந்தி பூ பூத்து குலுங்குகிறது.சூரியகாந்தி பயிரிட்டு 80 முதல் 90 நாட்களில் விளைச்சலைத் தருகிறது. ஒரு ஏக்கர் சூரியகாந்தி பயிரிட்டால் 600 கிலோ முதல் 900 கிலோ வரை சூரியகாந்தி விதைகள் கிடைக்கின்றன. தற்போது சூரியகாந்தி விதைகள் ஒரு கிலோ சுமார் ரூ.35 முதல் ரூ.40 வரை விலை போகிறது. தற்போது இப்பகுதியில் சூரியகாந்தி பூக்கள் நன்கு விளைந்திருக்கின்றன.
Related Tags :
Next Story