வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 28 Feb 2021 6:50 PM GMT (Updated: 28 Feb 2021 6:50 PM GMT)

வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நொய்யல்
நொய்யல், சேமங்கி, குளத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டுள்னர். பூக்கள் நன்றாக பூக்கும் தருவாயில் இருக்கும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து லேசான கோணிப் பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் பூ வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.1200-க்கு விற்றது தற்போது ரூ.400-க்கும், முல்லைப்பூ ரூ.1200-க்கு விற்றது தற்போது ரூ. 400-க்கும், அரளி ரூ. 200-க்கு விற்றது ரூ. தற்போது 80-க்கும், செண்டுமல்லி ரூ.120-க்கு விற்றது தற்போது ரூ.50-க்கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story