போலீஸ்காரரின் மோட்டார்சைக்கிள் திருட்டு


போலீஸ்காரரின் மோட்டார்சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 1 March 2021 1:08 AM IST (Updated: 1 March 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் போலீஸ்காரரின் மோட்டார்சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார்.

நாங்குநேரி, மார்ச்:
மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் சுடலைமுத்து. இவர் நேற்று முன்தினம் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகில் நடந்த அரசியல் கட்சிக் கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்றார். அப்போது அவர், நுழைவாயில் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
கூட்டம் முடிந்ததும் சுடலைமுத்து தனது மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது, அது மாயமானது தெரிய வந்தது. கூட்டத்துக்கு வந்த மர்மநபர், மோட்டார் சைக்கிளை நைசாக திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து சுடலைமுத்து அளித்த புகாரின்பேரில், நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story