உரிமை கோருவதால் பரபரப்பு: ஜெயமால்யதா யானை அசாம் மாநிலத்துக்கு சொந்தமானதா?


உரிமை கோருவதால் பரபரப்பு: ஜெயமால்யதா யானை அசாம் மாநிலத்துக்கு சொந்தமானதா?
x
தினத்தந்தி 28 Feb 2021 7:40 PM GMT (Updated: 28 Feb 2021 7:43 PM GMT)

பாகன்களால் தாக்கப்பட்ட ஜெயமால்யதா யானை அசாம் மாநிலத்துக்கு சொந்தமானதா உரிமை கோருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை,

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கப்பட்டியில் கோவில் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவை யானை பாகன்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. 

இந்த நிலையில், பாகன்களால் தாக்கப்பட்ட யானை அசாம் மாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப்பட்டதாகவும், ஒப்பந்த காலம் முடிந்தும் திருப்பி தரவில்லை என அந்த மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து அசாம் மாநில கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் யாதவா கூறியதாவது:- ஜெயமால்யதா யானை அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தை சேர்ந்த கிரின்மோரான் என்பவருக்கு சொந்தமான யானை என கூறப்படுகிறது. 

இதற்கான ஆவணங்கள் ஆய்வு செய்ததில், யானை காகபாதர் என்ற பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டது எனவும், 2008-ல் ஒப்பந்த அடிப்படையில் யானையை தமிழக அரசு வாங்கி உள்ளது. ஒப்பந்தம் முடிந்தும் திரும்பி கொடுக்காமல் இருப்பதும் தெரியவந்தது.

 இது குறித்து தமிழக வனத்துறையினரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளோம். மேலும், யானையை எங்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஜெயமால்யதா யானைக்கு அசாம் மாநிலத்துக்கு சொந்தமானது என்று உரிமை கோருவதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 

Next Story