நாய் கடித்து புள்ளிமான் சாவு
அதிராம்பட்டினத்தில் நாய் கடித்து புள்ளிமான் இறந்தது.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் நாய் கடித்து புள்ளிமான் இறந்தது.
புள்ளிமான் சாவு
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே தொக்காலிக்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள ஒருவரின் தோப்பில் நேற்று மாலை ஆண் புள்ளிமான் காயங்களுடன் இறந்துகிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்துகிடந்த புள்ளிமானை கைப்பற்றினர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அங்கே மான் புதைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலைப்பகுதியில் மான்கள் அதிகம் உள்ளன. அங்கிருந்து அதிராம்பட்டினம் அலையாத்திகாட்டிற்கு தண்ணீரை தேடி வந்த போது இந்த புள்ளி மான் நாய்கடித்து இறந்தது தெரியவந்தது. எனவே வனத்துறையினர் விலங்குகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story