ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் சேகரித்த நிதி ஒப்படைப்பு


ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் சேகரித்த நிதி ஒப்படைப்பு
x
தினத்தந்தி 1 March 2021 2:27 AM IST (Updated: 1 March 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் சேகரித்த நிதி ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம்,
அயோத்தியில் கட்டப்படும் ராமர்கோவில் கட்டுமானத்திற்கு தென்மாநில பக்தர்களிடமிருந்து பல்வேறு இந்து அமைப்புகள் மூலம் நன்கொடையாக நிதி பெறப்பட்டது. அந்த நிதியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள விசுவ இந்து பரிஷத் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில் கட்டுமானப்பணியை மேற்கொண்டிருக்கும் ராமஜென்மபூமி ஷேத்திரா அமைப்பின் நிதி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினரான காஞ்சி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியாரிடம் இந்து அமைப்பினர் ஒப்படைத்தனர். நிகழ்ச்சிக்கு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய இணைச்செயலாளர் கோபால்ரத்தினம், தென் மாநில அமைப்பாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்., விசுவஇந்து பரிஷத், இந்து முன்னணி, சேவாபாரதி, பஜ்ரங்தள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ராமர்கோவில் கட்ட சேகரித்த நிதியை ஒப்படைத்தனர். இதில் திரளான பொதுமக்கள், பக்தர்கள், காஞ்சிமடம் சீடர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் சேதுராமன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

Next Story