மாணவிகளுக்கு மாடி தோட்ட பயிற்சி


மாணவிகளுக்கு மாடி தோட்ட பயிற்சி
x
தினத்தந்தி 28 Feb 2021 9:52 PM GMT (Updated: 28 Feb 2021 9:52 PM GMT)

மாணவிகளுக்கு மாடி தோட்ட பயிற்சி

ஜீயபுரம், 
திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ம்ஆண்டு மாணவிகள், ஊரக தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தின் கீழ் அந்தநல்லூர் ஒன்றியத்தில் தங்கி களப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடித்தோட்டத்தில் பராமரித்து வரும் சிறப்பம்சங்கள் பற்றியும், அங்கு பராமரிக்கப்படும் மூலிகை செடிகள் பற்றியும் கேட்டறிந்தனர். இவர்களோடு இணைந்து விவசாயிகள் உற்பத்தியாளர்கள் குழுவின் தலைவர் ஹரிகிருஷ்ணன் கலந்துகொண்டு மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் பற்றியும், பஞ்சகாவ்யா, தசகாவ்யா, போன்றவற்றை பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றியும், மாடித்தோட்டத்தில் மூடாக்கின் பயன்பாடுகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

Next Story