சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 1 March 2021 4:14 AM IST (Updated: 1 March 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 12 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 
சிகிச்சை
இதுதவிர, நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கும், ஈரோட்டில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story