‘சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை’ வெள்ளையன் பேட்டி
‘சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை’ வெள்ளையன் பேட்டி.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசியல் கட்சி தலைவர்கள் முயற்சிக்க வேண்டும், வருகி்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது. வியாபாரிகள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களுக்கு எதிராக எந்த கட்சி செயல்பட்டாலும் அதை தமிழ்நாடு வணிகர் சங்கம் எதிர்க்கும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story