தொகுதி பங்கீடு குறித்து பேச ம.தி.மு.க. பேச்சுவார்த்தை குழு நியமனம் வைகோ அறிவிப்பு


தொகுதி பங்கீடு குறித்து பேச ம.தி.மு.க. பேச்சுவார்த்தை குழு நியமனம் வைகோ அறிவிப்பு
x
தினத்தந்தி 1 March 2021 9:47 AM IST (Updated: 1 March 2021 9:47 AM IST)
t-max-icont-min-icon

தொகுதி பங்கீடு குறித்து பேச ம.தி.மு.க. பேச்சுவார்த்தை குழு நியமனம் வைகோ அறிவிப்பு.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ம.தி.மு.க. சார்பில் குழு நியமிக்கப்படுகிறது. அந்த குழுவில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, ஆய்வு மைய செயலாளர் மு.செந்திலதிபன், உயர்நிலைக்குழு உறுப்பினர் வக்கீல் கு.சின்னப்பா, தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story