டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 1 March 2021 8:42 PM IST (Updated: 1 March 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது.

விழுப்புரம், 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள குரூப்-2 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் வேல்முருகன், லாவண்யா, இளநிலை உதவியாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பாரதிதாசன், மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறுகையில், இப்பயிற்சி வகுப்பானது வார வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் தொடங்கி நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி மே மாதத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னேற்பாடாக தற்போது இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதும் வாரந்தோறும் முழு மாதிரி தேர்வு நடத்தப்படும் என்றனர்.

Next Story