மாதாந்திர சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி
விழுப்புரத்தில் மாதாந்திர சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி நடந்துள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், இருமனம் தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் ஒன்றாக சேர்ந்து மாதாந்திர சீட்டு நடத்தி வந்தனர். இதில் நாங்கள் சேர்ந்து, மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தோம். சீட்டு நடத்திய காலம் முடிந்த பின்பும் 7 பேரும் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் 7 பேரும் ரூ.2 கோடி மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். எனவே அவர்களை கண்டுபிடித்து, பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story