பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு


பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 1 March 2021 8:57 PM IST (Updated: 1 March 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

முதன்மை கல்வி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா கலந்துகொண்டு உறுதிமொழியை வாசிக்க மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சேவியர்சந்திரகுமார், கண்காணிப்பாளர்கள் கோகுலகண்ணன், வெங்கடேசபெருமாள் மற்றும் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சின்னராஜ், ராதாகிருஷ்ணன், ரவீந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Next Story