வங்கி முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி


வங்கி முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 1 March 2021 8:57 PM IST (Updated: 1 March 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

தேனியில், வீடு ஏலம் விடப்பட்டதால் வங்கி முன்பு பெண் தீக்குளிக்க முயன்றார்.

தேனி:

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி திருச்செந்தூர் காலனியை சேர்ந்த கருப்பையா மனைவி முத்துலட்சுமி. இவர் தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு நேற்று மண்எண்ணெய் கேனுடன் வந்தார்.

 திடீரென வங்கி முன்பு அமர்ந்து தர்ணா செய்தார். பின்னர் அவர் தீக்குளிப்பதற்காக மண்எண்ணெயை தனது உடலில் ஊற்ற முயன்றார். அதற்குள் அங்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். 

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், "நான் இந்த தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்றேன். இதுவரை ரூ.7 லட்சம் வரை திருப்பி செலுத்தி உள்ளேன். 

ஆனால், வங்கியில் மேலும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டியது இருப்பதாக கூறினார்கள். இந்நிலையில் கடந்த மாதம் எனக்கே தெரியாமல் எங்கள் வீட்டை ஏலம் விட்டுவிட்டனர். 

எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத்தர வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றேன். அங்கு குறைதீர்க்கும் கூட்டம் நடக்காததால் வங்கி வந்தேன்" என்றார். 

இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

---

Next Story