உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
உளுந்தூர்பேட்டை
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிமுறைகள் அமலக்கு வந்ததை அடுத்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி மண்டல தேர்தல் அலுவலர் முருகன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து திருச்சி மற்றும் சேலம் வழியாக பிற பகுதிகளுக்கு செல்ல கூடியவர்கள் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்லவேண்டும் என்பதால் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றதா? என பறக்கும் படையினர் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு சோதனை செய்யும்போது வாகன ஓட்டிகள் சிலர் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Related Tags :
Next Story