கோவில்பட்டி மாநில மின்னொளி கபடி போட்டி
கோவில்பட்டியில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மாநில மின்னொளி கபடி போட்டி நடந்தது.
கபடி போட்டி
கோவில்பட்டி காந்தி நகரில் 3-ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 அணிகள் கலந்து கொண்டன.
போட்டிகள் நாக் -அவுட் முறையில் நடைபெற்றது. 2-வது நாள் போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். வீரர்களை செல்லத்துரை அறிமுகம் செய்து வைத்தார். இறுதி போட்டிக்கு விளாத்திகுளம் ப்ரண்ட்ஸ் கிளப் கபடி அணியும், சாத்தூர் ராஜா ஸ்போர்ட்ஸ் அணியும் தகுதி பெற்றன. இதில் 25 - 18 என்ற புள்ளிக்கணக்கில் விளாத்திகுளம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது.
பரிசு
முதல் இடம் பிடித்த விளாத்திகுளம் அணிக்கு ரூ,20,001-ம், கோப்பைையயும் பேராசிரியர் கருத்தப்பாண்டியன் வழங்கினார். 2-வது இடம் பெற்ற சாத்தூர் அணிக்கு ரூ.15,001-ம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story