உறவுகள் மேம்படவும், ஆயுள் நீடிக்கவும் சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை வழங்கும் ஆண்கள்


உறவுகள் மேம்படவும், ஆயுள் நீடிக்கவும்  சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை  வழங்கும் ஆண்கள்
x
தினத்தந்தி 1 March 2021 10:16 PM IST (Updated: 1 March 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

உறவுகள் மேம்படவும், ஆயுள் நீடிக்கவும், கயத்தாறு பகுதியில் சகோதரிகளுக்கு ஆண்கள் மஞ்சள் சேலை வழங்குகின்றனர்.

கயத்தாறு:
உறவுகள் மேம்படவும், ஆயுள் நீடிக்கவும், கயத்தாறு பகுதியில் சகோதரிகளுக்கு ஆண்கள் மஞ்சள் சேலை வழங்குகின்றனர்.

சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திருமணமான பெண்களுக்கு அவர்களது சகோதரர்கள் மஞ்சள் சேலை, வளையல், குங்குமம், தாலிக்கயிறு, பணம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். திருமணமாகாத இளம்பெண்களுக்கு தாலிக்கயிற்றினை தவிர்த்து மற்றவற்றை வாங்கி கொடுக்கின்றனர்.

இதன் மூலம் சகோதர உறவுகள் மேம்படும் என்றும், இருவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்றும் நம்புகின்றனர். இதனால் கயத்தாறு பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் மஞ்சள் சேலைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கயத்தாறைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

உறவுகள் வலுப்படும் 

திருமணமான பெண்களுக்கு அவர்களது சகோதரர்கள் மஞ்சள் சேலை வாங்கி கொடுப்பதால், அவர்கள் இருவருக்குமே ஆயுள் நீடிக்கும், உறவுகள் மேம்படும் என்று நம்புகிறோம். 

எனவே மஞ்சள் சேலையுடன் வளையல், குங்குமம், தாலிக்கயிறு, மல்லிகைப்பூ, தங்களால் இயன்ற பணம் ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.
திருமணமாகாத இளம்பெண்களுக்கு தாலிக்கயிற்றினை தவிர்த்து மற்றவற்றை வாங்கி கொடுக்கிறோம். இதன் மூலம், பிரிந்த பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்துள்ளன. குடும்பங்களில் உறவுகள் வலுப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story