இறந்து கரை ஒதுங்கிய 100 கிலோ எடை கொண்ட டால்பின்
கோடியக்கரை கடற்கரையில் 100 கிலோ எடை கொண்ட டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.
வேதாரண்யம்:
கோடியக்கரை கடற்கரையில் 100 கிலோ எடை கொண்ட டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.
கரை ஒதுங்கிய டால்பின்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரை பகுதியான சவுக்கு பிளாட் பகுதியில் நேற்று காலை 100 கிலோ எடையுள்ள ஒரு டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான், வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து டால்பினை கைப்பற்றி கால்நடை மருத்துவரை அங்கு வரவழைத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் கடற்கரை பகுதியிலேயே அந்த டால்பினை புதைத்தனர்.
படகுகளில் அடிபடுகிறது
கோடியக்கரை முதல் நாலுவேதபதி வரையில் உள்ள கடற்கரை பகுதியில் அடிக்கடி இதேபோல் அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமையும், டால்பின்களும் இறந்து கரை ஒதுங்குவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இவைகள் படகுகளில் அடிபட்டு கரை ஒதுங்குவது வழக்கமாக உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வேதாரண்யம் கடற்கரை பகுதுியில அரியவகையான கடற்பன்றி இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story