வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்


வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்
x
தினத்தந்தி 1 March 2021 10:28 PM IST (Updated: 1 March 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேதாரண்யம்:
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வேதாரண்யத்தில் உப்பு  உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பருவம் தவறி பெய்த மழை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழையினால் காலதாமதமாக கடந்த மாதம் உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.
உப்பு உற்பத்தி பணி தீவிரம்
கடந்த ஒருவார காலமாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வேதாரண்யம் பகுதி உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை ஈடுபடுகின்றனர்.
இந்த ஆண்டு காலதாமதமாக உற்பத்தியை தொடங்கி இருந்தாலும், தற்போது வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி அளவை எட்ட முடியும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Next Story