திருப்பத்தூர், வாணியம்பாடியில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு


திருப்பத்தூர், வாணியம்பாடியில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 1 March 2021 10:42 PM IST (Updated: 1 March 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர், வாணியம்பாடியில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்

கொடி அணிவகுப்பு
தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் ெசய்யப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படை வீரர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
 
 திருப்பத்தூர் மாவட்டத்துக்கும் துணை ராணுவப்படை வீரர்கள் வந்துள்ளனர். பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை போக்கும் வகையில் அவர்கள் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சிவன்அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தலைமையில் திருப்பத்தூர் சின்னக் கடைத்தெருவில் இருந்து 150 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், 150 போலீசார் என மொத்தம் 300 பேர் துப்பாக்கியுடன், போலீஸ் பேண்டு வாத்தியத்துடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தேர்தல் பாதுகாப்பு

திருவண்ணாமலை ரோடு, அண்ணா நகர், கிருஷ்ணகிரி மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு வரை அவர்கள் ஊர்வலமாக சென்றனர். 
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியதாவது:-

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக திருப்பத்தூர் நகருக்கு 150 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் வந்துள்ளார்கள். அவர்களுடன், போலீசாரும் சேர்ந்து கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளோம். தேர்தல் பாதுகாப்புக்காக போதிய அளவு நம்மிடம் போலீசார் உள்ளார்கள். தேர்தல் பிரசாரம் நடைபெறும் இடம், வாக்குச்சாவடி மையம், வாக்கு எண்ணும் இடங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றார்.
வாணியம்பாடி

வாணியம்பாடயில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்ரி சுப்பிரமணி,  துணை போலீஸ் சூபபிரண்டு பழனி செல்வம் தலைமையில் துணை ராணுவப் படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசார் என 300-க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் இருந்து ெருமாள்பேட்டை, கோனாமேடு, காதர் பேட்டை, கச்சேரி சாலை, முனீஸ்வரர் ஆலயம், மேட்டுப்பாளையம், ஜாப்ராபாத் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story