மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சியில், மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு + "||" + In the run up to the Assembly elections In Kallakurichi the Central Security Forces march

சட்டமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சியில், மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு

சட்டமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சியில், மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு
சட்டமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சியில், மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு
கள்ளக்குறிச்சி

சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(ஏப்பரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக இன்ஸ்பெக்டர் வித்யாசாகர் சிங் தலைமையில் மத்திய பாதுகாப்பு படையினர் 92 பேர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வந்தனர். 

பின்னர் கள்ளக்குறிச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹியாவுல்ஹக் தலைமையில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த அணிவகுப்பு கச்சேரி சாலை, 4 முனை சந்திப்பு, சேலம் மெயின்ரோடு, கவரைதெரு, கிராமச்சாவடி தெரு, மந்தைவெளி, காந்திரோடு, கச்சராபாளையம் சாலை மற்றும் முக்கிய சாலை வழியாக மீ்ண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், மத்திய பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வித்தியாசாகர் சிங், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜதாமரை பாண்டியன், புவனேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தியாகதுருகம் அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
தியாகதுருகம் அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
2. கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
கண்டாச்சிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு
3. துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
4. துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
5. துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு
துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு