கரூரில் கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம்
கரூரில் கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது
கரூர்
கரூரில் கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது கூட்டத்திற்கு தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தங்கராசு, ஆலோசகர் குப்பாராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த சில நாட்களாக கொசுவலை உற்பத்திக்கு பயன்படும் பிளாஸ்டிக் குருணை கிலோ ரூ.20 வரை விலை உயர்ந்துள்ளதால் தொழில் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல், டீசல் வரியை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story