3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது


3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 March 2021 12:16 AM IST (Updated: 2 March 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலாடியில் 3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சாயல்குடி,

கடலாடி பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கடலாடி இந்திராநகரில் சோதனை மேற்கொண்டதில் அப்பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் சண்முகையா பாண்டியன் (வயது 25) என்பவரது வீட்டில் இருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த சண்முகையாபாண்டியனை கைது செய்தனர்.


Next Story