ரூ.55 லட்சத்தில் 5 புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது
ரூ.55 லட்சம் நிதியில் பாம்பன் ெரயில் பாலத்தில் 5 புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
ராமேசுவரம்,
இரும்பு கர்டர்கள்
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ெரயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அதுபோல் கடலுக்குள் 146 தூண்கள் கட்டப்பட்டு அதன் மீது 145 கர்டர்கள் அமைக்கப்பட்டும் அதன் மீது தண்டவாளங்கள் போடப்பட்டு ெரயில்கள் சென்று வருகின்றன. சுமார் 106 ஆண்டுகளை கடந்தும் பாம்பன் ெரயில் பாலத்தில் வெற்றிகரமாக ெரயில் போக்குவரத்து நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் பாம்பன் ெரயில்வே பாலத்தில் உப்புக்காற்றால் துருப்பிடித்த 5 பழைய இரும்பு கர்டர்களை அகற்றி புதிய இரும்பு கர்டர்களை பொருத்தும் பணியானது நேற்று முதல் தொடங்கியது. நேற்று காலை 9 மணி அளவில் பாம்பன் ெரயில்வே பாலத்தின் 42 மற்றும் 43 ஆகிய தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்த பழைய இரும்பினாலான கர்டர் கிரேன் மூலம் அகற்றப்பட்டது.
ஆய்வு
தொடர்ந்து பாம்பன் ெரயில்வே நிலையத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ெரயில்வே தொழிலாளர்கள் மூலம் புதிய இரும்பு கர்டர் ஆனது கயிறு கட்டி பாம்பன் ெரயில்வே பாலம் வழியாக பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பழைய கர்டர் அகற்றப்பட்ட அதே இடத்தில் புதிய இரும்பினாலான கர்டர் பொருத்தப்பட்டது.
புதிய கர்டர் பொருத்தி முடிக்கப்பட்ட பின்னர் திருச்சி பயணிகள் ெரயில் வந்த போது புதிய கர்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் ஏதேனும் அதிர்வுகள், மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ெரயில்வே அதிகாரிகளும் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆனால் எந்த ஒரு அதிர்வும் இல்லாததால் ெரயிலானது பாலத்தை பாதுகாப்பாக கடந்து ராமேசுவரம் நோக்கி சென்றது.
இதுபற்றி ெரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, பாம்பன் ெரயில்வே பாலத்தில் முதல் கர்டர் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் மீதமுள்ள நான்கு இரும்பு கர்டர்களும் ெரயில் பாலத்தில் பொருத்தி இந்த பணிகள் முடிக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story