மது விற்ற 9 பேர் கைது
மது விற்ற 9 பேர் கைது
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனுக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து அவர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்ததாக ஈஸ்வரன் (வயது37), புழுகையா (52), ரூபன் சக்கரவர்த்தி (27), நடராஜன் (58), ஜெயக்குமார் (35), சக்தீஸ்வரன் (25), பாண்டீஸ்வரன் (28), சரவணக்குமார் (44), பாலமுருகன் (45) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 58 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story