சைபர் கிரைம் பிரிவுக்கு புதிய போலீஸ் நிலையம்


சைபர் கிரைம் பிரிவுக்கு புதிய போலீஸ் நிலையம்
x
தினத்தந்தி 2 March 2021 2:07 AM IST (Updated: 2 March 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

சைபர் கிரைம் பிரிவுக்கு புதிய போலீஸ் நிலையம்

திருச்சி
திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு செல்போன் மற்றும் இணையதள சேவையை தவறாக பயன்படுத்துவோர் மீது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் சைபர் கிரைம் புகார்களை விசாரிக்க புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட உள்ளார்.

Next Story