சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓட்டல் தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தாராபுரம்:
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இது பற்றிய விவரம் வருமாறு
பாலியல் பலாத்காரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சபரி முத்து மகன் பிரகாஷ் (வயது 20). தாராபுரம் பகுதியில் உள்ள ஒரு.தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் பிரகாஷ் ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி அந்த சிறுமியை காணவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என தாராபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
அப்போது அருகில் வசிப்பவர்கள் பிரகாஷ் என்பவரை விசாரிக்க சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். எனவே இந்த பிரச்சினை அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. பிறகு மகளிர் போலீசார் பிரகாசை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அந்த 13 வயது சிறுமியை ஆசைவார்த்தைகள் கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயற் சிக்கும்போது சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டதாக பிரகாஷ் தெரிவித்தார்.
போக்சோவில் கைது
அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று தாராபுரம் போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் பரிந்துரையின் பேரில் பிரகாசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story