ஆத்தூரில் தனியார் வங்கியில் தீ விபத்து
ஆத்தூரில் தனியார் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வங்கியில் இருந்த ஆவணங்கள் தீயில் எரிந்து சேதம் ஆனது.
ஆத்தூர்:
ஆத்தூரில் தனியார் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வங்கியில் இருந்த ஆவணங்கள் தீயில் எரிந்து சேதம் ஆனது.
தீ விபத்து
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 6.30 மணியளவில் வங்கியிலிருந்து புகை வந்தது. புகை அதிகமாகவே அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலைய அலுவலர் சேகர் தலைமையில் விரைந்து வந்தனர்.
முக்கிய ஆவணங்கள் சேதம்
பின்னர் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே புகுந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு 8 மணிக்கு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த முக்கிய ஆவணங்கள், வங்கி புத்தகங்கள் எரிந்து சேதம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும் வங்கியில் இருந்த குளிர்சாதன எந்திரம் தீ விபத்தில் வெடித்து சிதறியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story