சேலத்தில் ஆபாச நடன நிகழ்ச்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓமலூர் அருகே நடந்த ஆபாச நடன நிகழ்ச்சியை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம்:
ஓமலூர் அருகே நடந்த ஆபாச நடன நிகழ்ச்சியை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆபாச நடன நிகழ்ச்சி
ஓமலூர் அருகே பாலகுட்டப்பட்டி கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிலரின் ஏற்பாட்டில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில திரைப்பட கிராமிய நடன கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் பாலகுட்டப்பட்டியில் பெண்கள் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், அதனை கண்டித்தும் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோஷம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், திரைப்பட கிராமிய நடன கலைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ஆபாச நடனத்தை அனுமதிக்க கூடாது. ஓமலூர் அருகே ஆபாச நடனம் ஆடியவர்கள் மீதும், அதற்கு துணை போனவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வைத்திருந்த பெட்டியில் புகார் மனுவை போட்டுவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story