கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  60 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 2 March 2021 5:53 AM IST (Updated: 2 March 2021 5:56 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி,

கொரோனா பரவலை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 வயதை கடந்தவர்களுக்கும், உடலில் பல்வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நேற்று முதல் தடுப்பூசி போடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

முதல் கட்ட ஊசியை போட்டுக் கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-ம் கட்ட ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும். ஊசி போட்டுக் கொள்ள விரும்பும் பொதுமக்கள், அரசு மருத்துவமனையில், ஆதார் அல்லது ஏதாவது ஒரு ஆவணங்களுடன் சென்று, ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொண்டு, தடுப்பூசி போட்டு கொள்ளலாம். மேலும் ஊசி போட்ட பிறகு மருத்துவமனையில் அரை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். அதில் எந்த பிரச்சினையும் இல்லையென்றால் ஊசி போட்டு கொண்டவர் வீட்டிற்கு சென்று விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் பார்வையிட்டனர்

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதை, அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் முத்துசெல்வன், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன் கூறுகையில்,
கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. பொதுமக்கள் அச்சமின்றி ஊசி போட்டு கொள்ளலாம். தற்போது கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதால், தடுப்பூசியை போட்டுக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனவே முதியவர்கள் மற்றும் 45 வயதைக் கடந்த நோய் உள்ளவர்கள் தவறாமல் தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Next Story