கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்


கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
x
தினத்தந்தி 2 March 2021 12:57 AM GMT (Updated: 2 March 2021 12:57 AM GMT)

கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அம்மாபேட்டை
கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
முன்னாள் கவர்னர்
கேரள மாநில முன்னாள் கவர்னர் பி.சதாசிவம். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூரை சேர்ந்த இவர் இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றார். 
தற்போது 72 வயதாகும் சதாசிவம் தன்னுடைய மனைவி சரஸ்வதி அம்மாளுடன் (70) நேற்று குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று கொேரானா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அவர் கூறும்போது, "கிராமப்பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 
தடுப்பு நடவடிக்கை
உலக அளவில் மீண்டும் பரவிவரும் கொேரானாவின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் நடவடிக்கைகளை உதாசீனப்படுத்தாமல் பொதுமக்கள் அனைவரும் தங்களை கொேரானா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
 அப்போது வட்டார மருத்துவ அதிகாரி அருள்மணி, மருத்துவ அலுவலர்கள் சண்முகசுந்தரம், திவாகர் அங்குராஜ், சங்கரலிங்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், அம்மாபேட்டை சுகாதார ஆய்வாளர் வள்ளிகுமார் உள்பட பலர் உடன் இருந்தார்கள். 

Next Story